இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20.05.2026) மட்டக்களப்பு மவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினை ஜனாதிபதி மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது .
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி குறித்த நூலகத்தினை பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் பராமரிப்பின் கீழ் உள்ள குறித்த பொது நூலகமானது மத்தியரசு மற்றும் மாகாண அரசு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட நவீன வசதிகளை உள்ளடக்கிய மூன்று மாடி கட்டடங்களை கொண்டமைந்தும் காணப்படுகிறது.
குறிப்பாக, இப் புதிய நூலகக் கட்டிடத்தில், சிறுவர்களுக்கான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காகத் தனியானதொரு பிரிவு நிறுவப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஜ், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பல உயரதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் .
நிகழ்வில் மாநகர முதல்வரினால் ஜனாதிபதி பென்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியினால் நூலக வளாகத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்றும் நட்டு வைக்கப்பட்டது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










