இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இம் மாதம் 27 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை விசேட விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டும், பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான விடுமுறையினை அடிப்படையாகக் கொண்டும் இந்த விசேட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முக்கிய அறிவித்தல்: அனைத்து முஸ்லிம் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை தினங்களைக் கவனித்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விடுமுறை முடிவடைந்து மீண்டும் 01.06.2026 அன்று வழமை போல் பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ சுற்றுநிருபங்கள் கல்வி அமைச்சின் ஊடாக அனைத்து மாகாண கல்வித் திணைக்களங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









