பண்டிகை காலத்தையொட்டி முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் மீண்டும் ஒரு முட்டையின் விலையை 60 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.
நவம்பர் கடைசி வாரத்தில் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 40 ரூபாய் முதல் 42 ரூபாய் வரையிலும், கடந்த வாரம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாய் முதல் 46 ரூபாய் வரை அதிகரித்தது.
09.12. 2023 அன்று முதல் முட்டை ஒன்றின் விலை 55 முதல் 60 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டது.
எதிர்வரும் கிறிஸ்துமஸ் காலத்தில் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என முட்டை வியாபாரிகள் கூறியதையடுத்து, முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை உயர்த்தியுள்ளனர்.
முட்டை விலை உயர்வால் கேக், இனிப்பு வகைகளின் விலையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇