World CIO 200 Summit 2026 சர்வதேச உச்சிமாநாடு கொழும்பில் ஆரம்பம்!

அரசு, தொழில்முனைவோர் மற்றும் சமூகத் துறைகளின் டிஜிட்டல் மாற்றத்திற்கு தலைமை தாங்கும் உலகளாவிய தலைமைத் தகவல் அதிகாரிகளின் (Chief Information Officers – CIOs) மற்றும் தொழில்நுட்பத் தலைவர்களின் பங்கேற்புடன் “World CIO 200 Summit 2026” சர்வதேச உச்சிமாநாட்டின் ஆரம்ப நாள் நிகழ்வு 23.09.2026 அன்று கொழும்பில் நடைபெற்றது.

குறித்த மாநாடு இம் மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மையமாக மேம்படுத்துவதையும், அரசாங்கத்தின் தொழில்நுட்பக் கொள்கைகளை சர்வதேச மட்டத்துடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இம்மாநாட்டின் ஆரம்ப விழாவில், கௌரவப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமை தாங்கினார்.

நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கௌரவப் பிரதமர் ஹரிணி அமரசூரிய,

அரசின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம் குறித்து வலியுறுத்தினார். டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் அனைத்து மக்களுக்கும் தெளிவான மற்றும் நியாயமான பொதுச் சேவை வழங்கப்பட வேண்டும் என்றும், நவீன தொழில்நுட்பமானது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், புதிய பொருளாதார மற்றும் தொழில் வாய்ப்புகளை விரிவாக்குவதற்கும், அரசுச் சேவைகளைப் பலப்படுத்துவதற்கும், அனைத்துத் தரப்பினரின் பொருளாதாரப் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இம்மாநாட்டின் முதல் நாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் GovTech ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய உள்ளிட்ட தலைவர்களும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், தொழில்நுட்பத் தொழில்முனைவோர்கள் மற்றும் உலகளாவிய CIO அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects