டெங்கு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கு எதிராகப் போராடுவதற்கும் விசேட ஆயுர்வேத மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் உபுல் கொந்தசிங்க,
இந்த மருந்துகள் பொதுமக்களினதும் மற்றும் டெங்கு நோயாளர்களினதும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு மாகாண ஆயுர்வேத திணைக்களம் புதிய மருந்தொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், மாகாணத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அதனை வீடுகளுக்கு விநியோகித்து வருகின்றது.
அத்துடன், நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான புகைத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் விசேட தூள்களையும் இத்திணைக்களம் விநியோகித்து வருகின்றது.
இந்த மருந்துகள் மற்றும் விநியோகப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அரசாங்க நிதி செலவிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை வீசியெறியாமல் முறையாகப் பயன்படுத்துமாறு உபுல் கொந்தசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










