மேலும் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று (22.5.2026) காலை 9 மணிக்கு வௌியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அனர்த்தங்கள் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்க, பாதுக்கை, கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, கிரிஎல்ல, எலபாத்த, கலவானை, நிவித்திகல, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை, களுத்துறை மாவட்டத்தின் ஹொரனை, புளத்சிங்கள, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூபிட்டிய, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை மற்றும் மத்துகம மற்றும் கம்பஹா மாவட்டத்தின் மீரிகம, திவுலப்பிட்டிய ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects