தற்போது நிலவும் மழையுடனான வானிலைக்கு மத்தியிலும், நாட்டின் பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண மட்டத்திலேயே காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், மகுறு கங்கை மகுர பகுதியிலும், குடா கங்கை மில்லகந்த பகுதியிலும் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதுடன், குடா கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28.05.2026) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 21 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக சீதாவக்க கங்கை படுகைக்கு உட்பட்ட தெரணியகல பகுதியில் 73.8 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், களு கங்கை படுகைக்கு உட்பட்ட எல்லகாவ பகுதியில் 69.3 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், களனி கங்கை படுகைக்கு உட்பட்ட கிளென்கோர்ஸ் மற்றும் கித்துல்கல ஆகிய பகுதிகளில் முறையே 42.7 மில்லிமீட்டர் மற்றும் 36.9 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்த மழைவீழ்ச்சிக்கு மத்தியிலும் களனி, களு, ஜின், நில்வலா, மகாவலி மற்றும் அத்தனகலு ஓயா உள்ளிட்ட பிரதான ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண வரம்பிற்குள்ளேயே காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










