குறைந்த உயரமுடைய 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் – நேபாள அரசாங்கம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மலைச் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், குறைந்த உயரமுடைய 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என, நேபாள அரசாங்கம் அறிவித்துள்ளது.

நேபாளத்தில், உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து, 29,031 அடி உயரத்தில் உள்ளது.

இந்த சிகரத்தில் ஏற ஒருவருக்கு, 10 இலட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது செப்டெம்பர் 1 முதல், 13 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கிறது.

இந்நிலையில், மலை சுற்றுலாவை மேம்படுத்தக் குறைவான உயரமுடைய, 97 சிகரங்களில் இலவசமாக ஏறலாம் என, நேபாள அரசாங்கம் நேற்று அறிவித்தது.

இதன்படி, கர்னாலி, சுதுர்பாஷ்சிம் மாகாணங்களில்,19,000 அடி உயரம் முதல், 23,000 அடி உயரம் வரை உள்ள, 97 மலைச் சிகரங்களில் இலவசமாக ஏறலாம் எனவும், இதற்குக் கட்டணம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதுாரப் பகுதிகளுக்கு அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, உள்ளூர் சமூகங்களுக்கு வருமானத்தை ஈட்டுவதே இதன் நோக்கம் என, நேபாள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு முன், குறைந்த உயரமுடைய சிகரத்தில் ஏறியிருக்க வேண்டும் என்பதையும் நேபாள அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects