மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜினால் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று (01) கையளிக்கப்பட்டது.
சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாவட்டச் செயலகத்தினால் ஶ்ரீ புத்த வருடம் 2570 மற்றும் தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சக்கர நாற்காலிகள் மற்றும் கை ஊன்றுகோல் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு, கிரான், மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை மற்றும் காத்தான்குடி முதலிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீதாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா கோணேஸ்வரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










