LPL கிரிக்கெட் தொடரின் 6 ஆவது சீசனுக்கான வீரர்கள் தேர்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 421 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 179 உள்நாட்டு வீரர்களும், 242 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.
வீரர்கள் தேர்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்நாட்டு வீரர்கள் தேசிய மட்டம், உள்ளூர் மட்டம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்கள் எனப் பல பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.
அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களும் பிளாட்டினம், கோல்ட் , கிளாசிக் , எமர்ஜிங் மற்றும் அசோசியேட் ஸ்டார்ஸ் எனப் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த அணிகளுக்காகத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதில், உள்நாட்டு வீரர்களில் 17 பேர் பிளாட்டினம் பிரிவிலும், 34 பேர் கோல்ட் பிரிவிலும், 80 பேர் கிளாசிக் பிரிவிலும், 48 பேர் எமர்ஜிங் பிரிவிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேபோல், வெளிநாட்டு வீரர்களில் 31 பேர் பிளாட்டினம் பிரிவிலும், 64 பேர் கோல்ட் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
6ஆவது முறையாக நடத்தப்படும் இந்த லங்கா பிரீமியர் லீக் 2026 தொடரானது, எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முறை போட்டித் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
ஐசிசியின் (ICC) முழுநேர உறுப்புரிமை கொண்ட அனைத்து நாடுகளின் வீரர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளிலிருந்து வீரர்கள் இதற்காகப் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










