வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு கொடி தின நிகழ்வு 02.06.2026 அன்று நடைபெற்றது.
இதன் போது முதலாவது கொடி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக்கிற்கு அணிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உதவி பிரதேச செயலாளர் ஜுமானா ஹசீன், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத் அகமட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம்.ஷாகித், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.தாஹிர், தலைமை முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், வங்கி முகாமையாளர் எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்களுக்கும் கொடிகள் அணிவிக்கப்பட்டன.
புகைத்தல் மற்றும் புகையிலைப் பாவனையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், புகையிலை இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










