சுகாதார உத்தியோகத்தர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, சுகாதார அமைச்சில் நிறுவப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் படி, உடற்பயிற்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆலோசகர் ஒருவரின் கீழ், வாரத்தின் 5 வேலை நாட்களிலும் இந்த உடற்பயிற்சி கூடத்தைச் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










