இன்று 12.12.2023 நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதற்கு , அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கொடுப்பனவாக 20 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு கோரி அந்த தொழிற்சங்கத்தினர், குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். அத்துடன், பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்று 12. 12. 2023 முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்தில் நோயாளர் பராமரிப்பு சேவையாளர்கள், கல்விப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஆகியோர் இணையமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇