அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்திய பின்னர், எஞ்சியிருக்கும் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதை பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கி (CBSL) கட்டாயமாக்கியுள்ளது.
புதிய விதிமுறையின்படி, ஏதேனும் ஒரு மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தைப் பெறும் ஏற்றுமதியாளர்கள், அதில் மீதமுள்ள தொகையை அடுத்த மாதத்தின் 10 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னதாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த புதிய நிபந்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










