‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின்கீழ் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – அரசாங்கம் ஒப்புதல்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடளாவிய ரீதியில் நகரப்பகுதிகளில் பொதுச்சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டத்தின்கீழ் 150 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள உள்ளுராட்சி மன்றங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைவாக இவ்வாண்டு 26 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 26 செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இந்நிதி பயன்படுத்தப்படும்.

அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் இத்திட்டத்தின்கீழ் 2025 ஆம் ஆண்டு 29 சுகாதார செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அவற்றில் 16 திட்டங்கள் ஏற்கனவே முடிவுறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் எஞ்சிய திட்டங்கள் அடுத்த மாதத்துக்குள் பூர்த்திசெய்யப்படும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇


Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects