வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 12.12.2023 அன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த பாடசாலைகளின் அதிபர்களினால் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிகம் உள்ள பாடசாலைகளில் , உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது அந்த பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇