தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு அமைவாக, இன்று (18.06.2026) பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவன வளாகங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுகின்றன.
நாட்டில் தற்போது நிலவும் டெங்கு அபாய நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 15 ஆம் திகதி முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ் இன்றைய தினம், அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள், தனியார் பாடசாலைகள் மற்றும் சர்வதேச பாடசாலைகள், அனைத்து விதமான கல்வி நிறுவன வளாகங்கள் என்பன முழுமையாக சோதனையிடப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.
தொடர்ந்து வரும் நாட்களிலும் இந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், நாளை (19.06.2026) அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அத்துடன் தொழிற்சாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
நாளை மறுதினம் (20.06.2026) பொதுமக்களின் தனியார் வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்திகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இந்த தேசிய வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்கள் மற்றும் நிறுவன பிரதானிகள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










