இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு 21.06.2026 அன்று நாட்டை வந்தடைந்தார்.

அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

குறித்த சந்திப்பின் போது சிரேஷ்ட அரச மற்றும் வர்த்தக தலைவர்ளுடனான அவரது சந்திப்புகள், வர்த்தகம் மற்றும் முதலீட்டை வளர்ப்பதிலும், கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன் இரு நாடுகளிலும் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கும், செழிப்பிற்கும் உதவி செய்யும் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்து சமுத்திரம் பாதுகாப்பானதாகவும், திறந்ததாகவும் இருப்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects