மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிறுவனங்களில் நிலவிய சைகை மொழி (Sign language) மொழிபெயர்ப்பாளர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பித்து, எழுத்து மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் தகுதி பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 22.06.2026 அன்று நடைபெற்றது.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் சமூக சேவைகள் திணைக்கள வளாகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் உபாலி பன்னில,
சைகை மொழியையும் ஒரு பிரதான மொழியாக அங்கீகரிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதற்காக சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒரு விசேட பொறுப்பு உள்ளதாகவும், இதனை வெறும் ஒரு தொழிலாக மட்டும் பார்க்காமல் அதற்கு அப்பாற்பட்ட ஒரு சேவையாகக் கருதிச் செயற்படுவது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, சமூக சேவைகள் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன மற்றும் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










