Samsung Smart TV யில் இனி இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்த முடியும் – மெட்டா நிறுவனம்

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சாம்சுங் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் (Samsung Smart TVs) இனி இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்த முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், வீட்டிற்குள் பலருடன் இணைந்து பார்க்கும் கூட்டுப் பார்வையை (Group viewing) மேம்படுத்தும் நோக்கில் பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த 2025 டிசம்பரில் அமேசான் ஃபயர் டிவி (Amazon Fire TV) சாதனங்களிலும், பின்னர் 2026 பெப்ரவரியில் கூகுள் டிவி (Google TV) சாதனங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சாம்சுங் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளுக்கும் இச் செயலி கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் இணையத்துடன் இணைக்கப்பட்ட மூன்று முக்கிய தொலைக்காட்சி தளங்களில் இன்ஸ்டாகிராம் செயலி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியான சாம்சுங் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் இந்த புதிய புதுப்பித்தல் மூலம் இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்தலாம்.

பயனர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப நகைச்சுவை, விளையாட்டு அல்லது தங்களுக்குப் பிடித்த உள்ளடக்க உருவாக்குநர்களின் ‘ரீல்ஸ்’ காணொளிகளைத் தனித்தனிப் பிரிவுகளாக வகைப்படுத்தி எளிதில் கண்டறியும் வசதியை மெட்டா சோதித்து வருகிறது.

பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் சேமித்து வைத்துள்ள (Saved) ரீல்ஸ் காணொளிகளை நேரடியாகத் தொலைக்காட்சித் திரைக்கு அனுப்பிப் பார்க்க முடியும்.

செங்குத்தான (Vertical) காணொளிகள் பெரிய திரைகளுக்குப் பொருத்தமாக இல்லாததால், தொலைக்காட்சிகளுக்காக பிரத்யேகமாக கிடைமட்ட காணொளிகளை மெட்டா சோதித்து வருகிறது.

உள்ளடக்க உருவாக்குநர்கள் தங்கள் ரீல்ஸ் காணொளிகளைத் தொடர்களாக ஒழுங்கமைக்கும் வசதியை மெட்டா கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, நீண்ட வடிவ காணொளிகள் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்களின் நேரலைகளை (Live Broadcast) முதன்முறையாகத் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வசதிகளையும் மெட்டா ஆராய்ந்து வருகிறது.

இந்த புதிய அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக எப்போது பொதுப்பயன்பாட்டிற்கு வரும் என்ற திகதியை மெட்டா இன்னும் அறிவிக்கவில்லை என்பதுடன், பெரிய திரைகளுக்கு ஏற்ற சிறந்த உள்ளடக்க வடிவங்களை உருவாக்குவது குறித்து உள்ளடக்க உருவாக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects