அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் அணியாத 400 வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு சட்ட நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சீட் பெல்ட் (Seatbelts) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விதிமுறைகளை மீறிய சுமார் 400 வாகன ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களிலும் தற்போது விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதம் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய விதியின்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளும் சீட்பெல்ட் அணிவது கட்டாயமாகும்.

எனினும், சீட்பெல்ட் வசதிகள் இன்றி தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

அதிவேக வீதிகளில் விபத்துக்களின் போது ஏற்படும் ஆபத்துக்களைக் குறைப்பதற்காக இந்த சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects