கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கையின் ஏற்றுமதித் துறை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையின் ஏற்றுமதித் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 7.3 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தற்காலிகத் தரவுகள் மற்றும் இரத்தினக்கல், ஆபரணங்கள் மற்றும் எரிபொருள் தயாரிப்புகளுக்கான மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2026 ஜனவரி முதல் மே வரையான காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி வருமானம் 7,393.39 மில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.56 சதவீத வளர்ச்சியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 5,758.44 மில்லியன் அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளதுடன், இது 7.63 சதவீத வளர்ச்சியாகும்.

சேவைகள் ஏற்றுமதித் துறையும் வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், 1,634.95 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 7.31 சதவீத உயர்வாகும் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

மேலும், 2026 மே மாதத்தில் மட்டும் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி 18.25 சதவீதத்தாலும், சேவைகள் ஏற்றுமதி 18.67 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects