நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உயிர்க்கொல்லி டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 49,000 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மொத்த நோயாளர்களில் 25,000 இற்கும் மேற்பட்டவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் முடிவடைய இன்னும் ஒரு வார காலம் உள்ள நிலையில், இம் மாதத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 15,000-ஐ நெருங்கியுள்ளது.

நோயாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அங்கொடை தொற்றுநோய் வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில மற்றும் கம்பஹா உள்ளிட்ட பல பிரதான வைத்தியசாலைகள் தற்போது அவற்றின் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளன.

இதன் காரணமாக, தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டை மீறி, நாட்டில் டெங்கு ஒரு தீவிர தொற்றுநோய் நிலைமையாக மாறுவதற்கான கடுமையான அபாயம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects