புதுப்பொலிவு பெறும் பம்பலப்பிட்டி புகையிரத நிலையம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையில், “Clean Sri Lanka” தேசிய திட்டத்தின் கீழ், நடைமுறைப்படுத்தப்படும் “சிஹின கமநாந்தயக்” (கனவு இல்லம் / Dream Destination) திட்டத்தின் கீழ் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் நவீனமயமாக்கல் மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேலைத்திட்டமானது அரசாங்க மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) செயற்படுத்தப்படுவதுடன் இந்நாட்டில் வாழும் பொதுமக்களின் நிதிப் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நவீனமயமாக்கல் பணிகள் தற்போதுவரை 55 மில்லியன் ரூபாய் செலவில் நடைபெற்று வருவதுடன், இவ்வருடத்தின் ஓகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து நவீனமயமாக்கல் பணிகளையும் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects