தேசிய சுற்றாடல் தினம், தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் என்பவற்றை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மற்றுமொரு சிரமதானம் இன்று (26.06.2026) நடைபெற்றது.
மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து நடாத்திய இச் சிரமதான நிகழ்வு மாவட்ட செயலக வளாகத்தினை அண்டிய வெளிப்புறப் பகுதிகளிலும் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.நவநீதன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களும், மாவட்ட செயலகத்தின் அனைத்து பிரிவுகளிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் இதன்போது கலந்துகொண்டு சிரமதானத்தினை மேற்கொண்டனர்.
டெங்கு ஒழிப்பை பிரதான நோக்கமாக கொண்டு, மாவட்ட செயலக வளாகத்திற்கு அண்டிய பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ரின்கள் மற்றும் பொலித்தீன் பைகள் என ஏராளமான உக்காத கழிவுகள் இதன் போது அகற்றப்பட்டதுடன் தீயிட்டு அழிக்கக்கூடிய கழிவுகள் தீயிடப்பட்டு குறித்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.



















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










