தேசிய அடையாள அட்டை சிக்கலால் முதியோர் கொடுப்பனவை இழந்தவர்களுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.

ரூபா 3,000 ஆக காணப்பட்ட இக்கொடுப்பனவை ரூபா 5,000 ஆக உயர்த்துவதற்கும், இதன் மூலம் பயனடையும் நபர்களின் எண்ணிக்கையை ஒரு மில்லியன் (10 இலட்சம்) வரை அதிகரிப்பதற்கும் தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, தற்போது ‘அஸ்வசும’ கணக்குகள் மூலம் 698,790 சிரேஷ்ட பிரஜைகளுக்கும், தபால் நிலையங்கள் ஊடாக 232,496 பேருக்கும் இந்த முதியோர் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அவர்களுள் 76,716 பேருக்கு இக்கொடுப்பனவு மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, அந்த சிரேஷ்ட பிரஜைகளுக்கு விரைவாக தேசிய அடையாள அட்டைகளை தயாரித்து வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை தேசிய முதியோர் செயலகம், ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளன.

எனவே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் இந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள சிரேஷ்ட பிரஜைகள் எவரேனும் இருப்பின், விரைவாக தங்களது கிராம உத்தியோகத்தர் (Grama Niladhari), சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் அல்லது முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரை அணுகுமாறு தேசிய முதியோர் செயலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects