ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை TIN எனப்படும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வழமையான வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றுக் கொள்ளும் முறைமை நடைமுறையில் உள்ளது.
இந் நிலையில் குறித்த வரி செலுத்துவோர் இலக்கத்தை பொதுமக்களுக்கு இலகுவாக வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடனான இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇