மட்டக்களப்பு மாவட்டத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக்கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமையில் 07.12.2023 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டத்தில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பிற திணைக்களங்களின் உயர்அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
2023ஆம் ஆண்டின் 4ம் காலாண்டிற்கான இக்கூட்டம் கணக்காய்வுத் திணைக்கள சிரேஸ்ட உதவிக் கணக்காய்வாரள் நாயகம் டபில்யு. ஆனந்த, மட்டக்களப்பு மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம். மாஹிர், மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. ஆர். காயத்திரி, மாவட்ட பிரதம கணகாளர் எஸ்.எம். பஸீர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. இதன்போது கணக்காய்வு முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. ஆர்.ஆர். மீபுர மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பிரதம உள்ளகக் கணக்காள்வாளர் என்.ஆர். சுபசிங்க ஆகியோர் நிகழ்நிலை ஊடக இணைந்து கொண்டனர்.
மேலும் இதன்போது அரச திணைக்களங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்பான பலவிடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன் நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு ஐயவினாக்கள் தொடர்பாகவும் திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇