அனைத்து விதப் போட்டிகளிலும் தலைவர் பொறுப்பை வகிக்க டேவிட் வார்னருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட்டுள்ளது.
டேவிட் வார்னரின் கோரிக்கைக்கு அமைய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை இந் நடவடிக்கையை எடுத்துள்ளது.
2018ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்தியதற்காக வார்னருக்கு ஓராண்டு விளையாடத் தடையும், அணித் தலைவராகச் செயற்பட வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது ஆனால் தற்போது அத் தடை நீக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வார்னர் ஓய்வு பெற்றிருந்தாலும் தடை நீக்கம் காரணமாக BBL தொடரில் அணித் தலைவராகச் செயற்பட வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇