மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக ஜெயானந்தி திருச்செல்வம் 01.07.2026 அன்று உத்தியோகபூர்வமாக தனது பதிவியினை பொறுப்பேற்றார்.
மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் மொஹமட் பஸீர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பணிப்பாளராக கடமையாற்றிவந்த எஸ்.ராஜ்பாபு இடமாற்றம் பெற்று கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக பதவியேற்கும் நிலையில் கடந்த நான்கு வருடங்களாக கோறளைப்பற்று – வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிவந்த ஜெயானந்தி திருச்செல்வம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய சமுர்த்திப் பணிப்பாளராக கடமையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










