சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டில் மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டு லேபலிடும் உத்தரவுகளை திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவினால் 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ் இந்த திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஜூன் 23 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

புதிய திருத்தங்களின்படி, சீனி அடங்கிய திரவ உணவுகளின் பக்கற்றுகளின் மீது காட்சிப்படுத்தப்பட வேண்டிய சிவப்பு, மஞ்சள் (Amber) மற்றும் பச்சை வர்ண குறியீட்டு இலச்சினைகளின் வடிவமைப்பு மற்றும் காட்சிப்படுத்தும் முறை குறித்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், கண்ணாடிப் போத்தல்களில் இடவசதி குறைவாக உள்ள சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய மாற்று இலச்சினை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் மூலம் “வியாபாரத்திலிருந்து வியாபாரத்திற்கு” வழங்கப்படும் உணவு தயாரிப்புகளுக்கான புதிய வரைவிலக்கணமும் சேர்க்கப்பட்டுள்ளதுடன், அத்தகைய தயாரிப்புகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படாமல், மேலதிக பதப்படுத்துதல், தயாரித்தல் அல்லது மறுவிற்பனைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் உணவுகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.

புதிய அட்டவணையின் உத்தரவுக்கமைய, 100 மில்லிலீட்டரில் 8.0 கிராமுக்கு அதிக சீனி கொண்ட பானங்களுக்கு சிவப்பு வர்ணமும், 2.5 கிராம் முதல் 8.0 கிராம் வரையான பானங்களுக்கு மஞ்சள் வர்ணமும், 2.5 கிராமுக்கு குறைவான சீனி கொண்ட பானங்களுக்கு பச்சை வர்ணமும் பயன்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects