மட்டக்களப்பில் தனிநபர் கோவைகளை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரச நிறுவனங்களிலும் தனிநபர் கோவைகளை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.06.2026 அன்று நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்தின் வழிகாட்டுதலின் கீழ் உத்தியோகத்தர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் முன்னாள் கிரான் பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் இச்செயலமர்வின் வளவாளராக கலந்து கொண்டார்.

தனிநபர் கோவைகளை துல்லியமாகவும் வினைத்திறனுடனும் பராமரிக்கும் நடைமுறைகள், கோவைகள் தொடர்பான ஆவணப்படுத்தல் முறைகள், நிர்வாகச் செயல்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் அனுபவ அடிப்படையிலான நடைமுறை எடுத்துக்காட்டுகள் ஊடாக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் கடந்தகால சுற்றுநிருபங்களின் அடிப்படையில் தனிநபர் கோவைகள் மற்றும் ஓய்வூதிய நிர்வாகம் தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்கள் விளக்கப்பட்டதுடன், உத்தியோகத்தர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விரிவான பதில்கள் மற்றும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

அரச சேவையில் தனிநபர் கோவைகள் தொடர்பான நிர்வாகத்தை திறம்பட முன்னெடுப்பதற்கும், உத்தியோகத்தர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதற்கு இச்செயலமர்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects