வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அம்பர் நிற எச்சரிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களுக்காக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்பின்படி, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்கள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இக்கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் அலையின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, கடற்படையினரும் மீனவ சமூகத்தினரும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் அடுத்தடுத்த வானிலை கணிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects