நாட்டைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சில கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தயாராக இருக்குமாறு ஆம்பர் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (06.07.2026) திங்கட்கிழமை வெளியிடப்பட்ட இந்த எச்சிக்கை நாளை (07.07.2026) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணி வரை செல்லுப்படியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் வரையான கடற்பரப்பு மற்றும் மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இக்கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










