இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ்
அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ 07.07.2026 அன்று சபாநாயகர்
வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவைச் சந்தித்தார்.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இராணுவ மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில், இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, ஏனைய நாடுகளுடனும் நடுநிலையான இராஜதந்திர உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது எனவும் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.
மேலும், இலங்கை கடற்படை வணிக நோக்கில் படகுகள் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் மூலம் நாட்டிற்கு வருவாய் ஈட்டுவதற்கும் உள்நாட்டு தொழில்துறையை மேம்படுத்துவதற்கும் காணப்படும் வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் வடக்கு மாகாணத்தின் தீவுப் பகுதிகளை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்துடன் நெருக்கமாக இணைந்து செயல்பட இலங்கை கடற்படை தயாராக இருப்பதாகவும் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
இதன்போது நினைவாக கடற்படைத் தளபதி மற்றும் சபாநாயகர் ஆகியோர் பரஸ்பரம் நினைவுப் பரிசுகளை வழங்கிக் கொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










