இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 16.07.2026 அன்று வரை நாட்டில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 73,455 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் 50 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,025 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,700 ஆக காணப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 15,341 என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 14,625 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, ஜூலை மாதத்தின் கடந்த 16 நாட்களில் 18,076 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் மாத்திரம் 21,538 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










