மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் இணையவழி வன்முறைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வொன்று அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதான மண்டபத்தில் 23.11.2023 அன்று இடம்பெற்றது.
இச் செயலமர்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிராந்திய மேற்பார்வை தாதிய சகோதரி உள்ளிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றிவரும் பொது சுகாதார தாதிய சகோதரிகள், பொது சுகாதார மருத்துவ மாதுக்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதார துறைசார்ந்த மேலும் பல உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது இணையவழி வன்முறைகள், மனித உரிமைகள், இனப்பெருக்கம், மகப்பேறு, பாதுகாப்பற்ற சுகாதார பழக்கவழக்கங்கள், போதைப் பாவனை, குடும்ப திட்டமிடல், இனரீதியான வன்முறை, சட்டரீதியான நடவடிக்கைகள் என பல்வேறுபட்ட விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டது.
செயலமர்வின் வளவான்மையை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸதீன் மேற்கொண்டிருந்தார் .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇