டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்காக ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் 15,000 ரூபா விசேட கொடுப்பனவை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு விடுவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு பாடசாலை மாணவருக்கு தலா 15,000 ரூபா வீதம் இதுவரை 204,311 மாணவர்களுக்கான கொடுப்பனவு முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்னும் 874 மாணவர்களுக்கு மாத்திரமே இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியுள்ளதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 3,064.67 மில்லியன் ரூபாவாகும்.
இது சதவீத அடிப்படையில் 99.88% முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










