நாடளாவியரீதியில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாடளாவியரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு 19.07.2026 அன்று இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects