தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்காக 6 புதிய உறுப்பினர்கள் நியமனம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபைக்காக 6 புதிய உறுப்பினர்கள் நியமிக்கும் நிகழ்வு, 20.07.2026 அன்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.

அதன் பிரகாரம், புதிய பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக வைத்தியர் அநுர திஸாநாயக்க, நியாஸ் முகமட் இர்ஷாத், விஸ்வநாத் எதிரிசிங்க, சஞ்சீவ குணரத்ன, எச். ஹேரத் மற்றும் சமிந்த பிரசாத் குமாரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந் நியமனங்களைத் தொடர்ந்து, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க ஆகியோர் புதிய பணிப்பாளர் சபையுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், இளைஞர் மேம்பாட்டுத் திட்டங்களை இலக்குடன் செயல்படுத்த பணிப்பாளர் சபையின் பல்வேறு துறை சார்ந்த பங்களிப்பு அவசியம் எனக் குறிப்பிட்டார்.

அமைச்சர் சுனில் குமார கமகே உரையாற்றுகையில்,

முறையான திட்டமிடல் மூலம் மன்றத்தின் பணிகளுக்குச் சுறுசுறுப்பான பங்களிப்பை வழங்குமாறும், எதிர்கால இளைஞர் அபிவிருத்தித் திட்டங்களுக்கான ஆலோசனைகளை முன்வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர் அருண பண்டார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகமுமான சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன மற்றும் தற்போதைய பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects