சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்தது!

ஜனவரி மாதம் தொடக்கம் முதல் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,313,974 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஜூலை 01 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 167,401 என அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,785 ஆகும்.

இரண்டாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 18,419 ஆகப் பதிவாகியுள்ளது.

மூன்றாவது அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நெதர்லாந்திலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 10,540 ஆகும்.

அதேவேளை, இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.

மேலும், இந்த ஆண்டின் கடந்துபோன காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 279,328 ஆகப் பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects