பொதுப் போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய ‘மெட்ரோ’ பேருந்துகள் 29.07.2026 அன்று நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்தப் பேருந்துகள் சீனாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் தரமானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இந்தப் புதிய மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மே மாதம் கைச்சாத்திடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்திற்கு அமையவே, இந்த 104 பேருந்துகளும் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







