க.பொ.த உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

க.பொ.த உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு இன்று (10.08.2026) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 1,700 ‘சிசு செரிய’ பாடசாலை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை முடியும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், பரீட்சையை முன்னிட்டு பாடசாலை பேருந்து சேவைகளை தடையின்றி நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பரீட்சை காலத்தில் புகையிரத சேவைகள் எவ்வித ரத்துகளுமின்றி வழக்கமான அட்டவணையின்படி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சை நடைபெறும் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படவிருந்த புகையிரதப் பாதை புனரமைப்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects