8 பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் – சுகாதார அமைச்சு

சுகாதார சேவையின் மனிதவளத்தைப் பலப்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் திட்டமிடப்பட்ட விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம், திறமையும் தொழில்சார் அறிவும் கொண்ட மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில் துணை மருத்துவ சேவைக்கான புதிய பயிற்சி நெறிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய,

1.பல் தொழில்நுட்பவியலாளர் (Dental Technician)

2.பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector – PHI)

3.செயற்கை உறுப்பு மற்றும் பொருத்துறுப்பு நிபுணர் (Prosthetist and Orthotist)

4.சுகாதார பூச்சியியல் அதிகாரி (Health Entomology Officer)

5.பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் (School Dental Therapist)

6.மின்விசையலைவரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Cardiographer – ECG)

7.மருந்து தயாரிப்பாளர் / மருந்தாளர் (Dispenser)

8.மின்மூளை வரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Encephalographer – EEG)

இப் பயிற்சிப் பாடநெறிக்கு விண்ணப்பிக்க,

2026 ஆகஸ்ட் 07 ஆம் திகதியிட்ட 2501 ஆம் இலக்க அரச வர்த்தமானியின் படி, 2019 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் க.பொ.த (உயர்தரம்) பரீட்சையில் அறிவியல் (Science) அல்லது கணிதப் (Maths) பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களாக இருத்தல் வேண்டும்.

இந்த நிலையில், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி 31.08.2026 ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects