மழையற்ற வானிலை – விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிக்கல்

தற்போது நிலவும் மழையற்ற வானிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீர் இன்மையால் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பொலன்னறுவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக நெல் விவசாயமும் அழியத் தொடங்கியுள்ளது.

அத்துடன், நீர் இன்மையால் தமது மகசூலுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதிகளில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வானிலை அவதானிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects