இலங்கையின் இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபாலவை அண்மையில் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய யுனிசெப் அமைப்பின் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇