இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கம் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் இடையே சந்திப்பு

இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் இனோவே நவோகி (Inoue Naoki) உட்பட அந்த சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவிற்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் 12.08.2026 அன்று நடைபெற்றது.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அண்மையில் வடமேல் மாகாண சபைக்கு மூன்று அம்புலன்ஸ்களை, சங்கத்தின் தலையீட்டுடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய இலங்கை – ஜப்பானிய நட்புறவுச் சங்கத்தின் தலைவர், எதிர்காலத்திலும் இலங்கைக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படும் ஆதரவை பாராட்டுவதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கலாநிதி ஆர்.டி.ஆர். பெரேரா, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் ஆர்.ஏ. ருவன் பத்திரண, இலங்கை – ஜப்பான் நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களான எம்.ஆர். திசாநாயக்க, ஓ.என்.எஸ். அமரசிங்க, ஜி. டபிள்யூ. திஸ்ஸ தயானந்த ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects