பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போது சந்தையில் 1 கிலோ பெரிய வெங்காயம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தநிலையில், இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇