மின்தூக்கியில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளதன் காரணம் உங்களுக்கு தெரியுமா?

மின்தூக்கிக்குள் (Lift) நுழைந்தவுடன் தலைமுடியைச் சரிசெய்வதும், தோற்றத்தைப் பார்த்துக்கொள்வதும் பலரின் வழக்கமாகும்.

“நாம் அழகாக இருக்கிறோமா என்று பார்ப்பதற்காகத்தான் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது” என்று பலர் நினைக்கலாம். ஆனால், அதற்குப் பின்னால் பல உளவியல் மற்றும் நடைமுறைக் காரணங்கள் உள்ளன.

அதாவது மின்தூக்கி (Lift) போன்ற குறுகிய மற்றும் மூடிய இடங்களுக்குள் செல்லும்போது சிலருக்கு மூச்சுத் திணறல் அல்லது பயம் (Claustrophobia) ஏற்படக்கூடும்.

மின்தூக்கியில் (Lift) கண்ணாடி இருக்கும்போது, அது சுவர்களின் எல்லையை மறைத்து, இடம் விசாலமாக இருப்பது போன்ற காட்சி மாயையை உருவாக்குகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து பயணிகள் அமைதியடைகின்றனர்.

தொடக்க காலத்தில் “மின்தூக்கி (Lift) மிகவும் மெதுவாகச் செல்கிறது” என்று பயணிகள் தொடர்ந்து புகார் அளித்தனர்.

மின்தூக்கியின் வேகத்தை உடனடியாக அதிகரிப்பது கடினமாக இருந்ததால், பொறியாளர்கள் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பக் கண்ணாடியைப் பொருத்தினர்.

தங்களது தோற்றத்தைக் கவனிப்பதில் நேரம் செல்வது தெரியாமல், பயணக் நேரமும் விரைவாகக் கழிவதாக பயணிகள் உணரத் தொடங்கினர்.

மின்தூக்கியில் பலர் ஒன்றாகப் பயணிக்கும்போது, நமக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைத் திரும்பிப் பார்க்காமலேயே கண்ணாடியின் பிரதிபலிப்பு மூலம் அறிந்துகொள்ள முடியும். இது பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்கள் மின்தூக்கியிலிருந்து பின்னோக்கி (Reverse) நகர்ந்து வெளியேறும்போது, பின்னால் உள்ள இடத்தை நேரடியாகப் பார்ப்பது கடினம். அப்போது கண்ணாடியின் பிரதிபலிப்பு வழிகாட்டியாகச் செயல்பட்டு, அவர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவுகிறது.

இவை தவிர, நேர்முகத் தேர்வு அல்லது சுபநிகழ்ச்சிகளுக்குச் செல்வோர் தங்களின் தோற்றத்தை விரைவாகச் சரிசெய்துகொள்ளவும் இந்த கண்ணாடிகள் சிறந்த முறையில் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர……..👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects