சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களுக்கான 07 நாள் கொண்ட விசேட பயிற்சிமுகாம், 07.08.2026 அன்று முதல் 13.08.2026 வரை கொழும்பு – பணாகொட இராணுவ இசைப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது.
இப் பயிற்சி முகாம் சிறைச்சாலை திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, சிறைச்சாலை திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் கலைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இப் பயிற்சி முகாமில் நாட்டிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் கடமையாற்றும் பேண்ட் வாத்தியக் கலைஞர்களில் மொத்தம் 30 உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் விசேட அம்சமாக, மட்டக்களப்பிலிருந்து சிறைச்சாலை திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட ஒரேயொரு தமிழராக வேல்முருகு பிறேமதீபன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 30 ஆண்டுகளாக சிறைச்சாலை திணைக்களத்தின் முக்கிய அங்கமாக இயங்கி வரும் பேண்ட் வாத்தியக் குழுவினர், சிறைச்சாலை திணைக்களத்தில் புதிய உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நிறைவடைந்து நடைபெறும் பிரியாவிடை நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அத்துடன், சிறைச்சாலை திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழக்கும் சந்தர்ப்பங்களிலும், அவருக்கான இறுதி மரியாதை நிகழ்வுகளில் திணைக்களத்தின் பேண்ட் வாத்தியக் குழுவினர் பங்கேற்று தமது இசை அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







